தமிழக செய்திகள்

நடிகர் ரஜினிகாந்திடம் மு.க.அழகிரி தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார்

நடிகர் ரஜினிகாந்திடம் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார்

தினத்தந்தி

சென்னை,

கடந்த சில தினங்களுக்கு முன்பு 'அண்ணாத்த' படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அப்போது ரஜினிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.

இதனைத்தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், நடிகர் ரஜினியின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது ரத்த அழுத்தத்தை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து இன்று மாலை முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உடல்நலம் குறித்து விசாரித்ததாகவும், 2 அல்லது 3 நாளில் சென்னை திரும்புவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் அவரிடம் கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக புதிய கட்சி தொடங்குவது குறித்து ஆதரவாளர்களுடன் ஜனவரி 3 ஆம் தேதி ஆலோசனை நடத்திய பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும் என்று மு.க.அழகிரி தெரிவித்திருந்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு