இந்த நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடனும், சட்டமன்ற கட்சி உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவுடனும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் புதிய முழு ஊரடங்கு உத்தரவை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 24-ந் தேதி (நாளை) காலையில் இருந்து இந்த முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவை சரிவர அமல்படுத்த முடியவில்லை. மக்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்காதநிலையில் ஒரு வார காலத்துக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
எனவே இதை சரியாக அமல்படுத்துவதற்காக அனைத்து மாவட்ட கலெக்டர்களின் ஆலோசனை கூட்டத்தை மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளார். இந்த கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் நடைபெறுகிறது.