தமிழக செய்திகள்

ரூ.1970.57 கோடியில் 38 புதிய துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

110 துணை மின் நிலையங்களில் 4649 எம்.வி.ஏ. அளவிற்கு திறன் மேம்படுத்தப்பட்ட மின்மாற்றிகளை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ப்பதாவது;-

எரிசக்தித் துறை சார்பில் ரூ. 1970.57 கோடி செலவில் 38 புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் தாமரன்கோட்டை பிரிவு அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்து, 110 துணை மின் நிலையங்களில் 4649 எம்.வி.ஏ. அளவிற்கு திறன் மேம்படுத்தப்பட்ட மின்மாற்றிகள், தேரோடும் வீதிகள் மற்றும் டெல்டா கடலோர பகுதிகளில் உள்ள மேல்நிலை மின்கம்பிகளை மின் புதைவடங்களாக மாற்றுதல், கத்திரிமலை மலைகிராமம் மின்மயமாக்கல் திட்டம் ஆகியவற்றை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 26.02.2026 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்தின் சார்பில் 1970 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள 38 புதிய துணை மின் நிலையங்களை திறந்து வைத்து, 110 துணை மின் நிலையங்களில் திறன் மேம்படுத்தப்பட்ட உயர் மற்றும் அதிஉயரழுத்த மின் மாற்றிகளின் செயல்பாடுகள், தேரோடும் வீதிகள் மற்றும் டெல்டா கடலோர பகுதிகளில் உள்ள மேல்நிலை மின்கம்பிகளை மின் புதைவடங்களாக மாற்றுதல், ஈரோடு மாவட்டம் - பர்கூர் மலையிலுள்ள கத்திரிமலை குக்கிராமம் மின்மயமாக்கல் மற்றும் தஞ்சாவூர் மின் பகிர்மான வட்டம், தாமரன்கோட்டை புதிய பிரிவு அலுவலகக் கட்டடம் ஆகிய முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்.

புதிதாக நிறுவப்பட்டுள்ள 38 துணை மின் நிலையங்களை திறந்து வைத்தல்

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பில், சென்னை - கொளத்தூர் கணேஷ் நகர், முண்டகக்கண்ணியம்மன் கோவில் தெரு, செங்கல்பட்டு மாவட்டம் - சீவடி, குறிஞ்சி நகர், வள்ளுர் மாவட்டம்- பருத்திப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் - கீழ்கட்டளை, சென்னை மாவட்டம் - நங்கநல்லூர், அரியலூர் மாவட்டம் - பொய்யாதநல்லூர், ரெம்பலூர் மாவட்டம் - வெண்மணி, மேட்டுப்பாளையம், புதுக்கோட்டை மாவட்டம் - ரெகுநாதபுரம், தஞ்சாவூர் மாவட்டம் - வெப்பத்தூர், தூத்துக்குடி மாவட்டம் - குளத்தூர், வேலூர் மாவட்டம் - காந்தி நகர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் - எச்சூர் ஆகிய இடங்களில் 191 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள 16 புதிய 33/11 கி.வோ. துணைமின் நிலையங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் சார்பில் வள்ளுர் மாவட்டம் – கொரட்டூரில் 400/230-110 கி.வோ, வளிம காப்பு துணைமின் நிலையம், செங்கல்பட்டு மாவட்டம் - மாம்பாக்கம், கோயம்புத்தூர் மாவட்டம் - செல்வபுரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 230/110 கி.வோ துணைமின் நிலையங்கள்;

தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் சார்பில் திருவள்ளுர் மாவட்டம் – கொரட்டூரில் 400/230-110 கி.வோ, வளிம காப்பு துணைமின் நிலையம், செங்கல்பட்டு மாவட்டம் - மாம்பாக்கம், கோயம்புத்தூர் மாவட்டம் - செல்வபுரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 230/110 கி.வோ துணைமின் நிலையங்கள்;

சென்னை மாவட்டம் - ஐ.சி.எப்., தண்டையார்பேட்டை சி.டி.எச். (வளிமகாப்பு), ஈரோடு மாவட்டம் - நல்லம்பட்டி, கடலூர் மாவட்டம் - நெல்லித்தோப்பு, கரூர் மாவட்டம் - தென்னிலை, ஒத்தக்கடை, சின்னப்பணையூர், கிருஷ்ணகிரி மாவட்டம் - செவகனப்பள்ளி, மயிலாடுதுறை மாவட்டம் - ஆச்சாள்புரம், இராமநாதபுரம் மாவட்டம் - தேரிருவேலி, சேலம் மாவட்டம் - மெய்யனூர், தஞ்சாவூர் மாவட்டம் - வீரக்குடி, திருச்சிராப்பள்ளி மாவட்டம் - தங்கநகர், திருவள்ளூர் மாவட்டம் - புழல், அத்திப்பட்டு, மதுரவாயல் (வளிமகாப்பு), திருவண்ணாமலை மாவட்டம் - தச்சம்பட்டு, திருப்பூர் மாவட்டம் - உதியூர், வேலூர் மாவட்டம் - அனுப்பூ ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ள 110/33/22/11 கி.வோ. துணைமின் நிலையங்கள்;

என 1067 கோடியே 26 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள 22 புதிய துணைமின் நிலையங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

110 துணை மின் நிலையங்களில் கூடுதலாக 4649 எம்.வி.ஏ. திறன் மேம்படுத்தப்பட்ட உயரழுத்த மற்றும் அதிஉயரழுத்த மின் மாற்றிகளின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தல்

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பில், சென்னை மாவட்டம் - ஏர்லேண்ட், காரம்பாக்கம், கிண்டி, கொடுங்கையூர், மடிப்பாக்கம், ஐ.சி.எப்., பி&சி மில், செங்கல்பட்டு மாவட்டம் - முடிச்சூர், ராஜகீழ்ப்பாக்கம், தர்மபுரி மாவட்டம்- பைரநாயக்கன்பட்டி, காஞ்சிபுரம் மாவட்டம் – தில்லைகங்கா நகர், கன்னியாகுமரி மாவட்டம் - வடச்சேரி, கிருஷ்ணகிரி மாவட்டம் - கீழமங்கலம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - பண்ணங்கொம்பு, திருவள்ளூர் மாவட்டம் - காமராஜ் நகர், ரெட்ஹில்ஸ், மிட்னமல்லி, ஹிராநந்தினி, மாதவரம் லெதர் எஸ்டேட், திருநெல்வேலி மாவட்டம் - தச்சநல்லூர், விருதுநகர் மாவட்டம்- மல்லிபுதூர், விருதுநகர், பெரியபுலியம்பட்டி ஆகிய இடங்களில் 23 இயக்கத்தில் உள்ள 33/11 கி.வோ. துணை மின்நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள கூடுதல் உயரழுத்த மின் மாற்றிகள்;

தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் - திருப்பெரும்புதூர், சேலம் மாவட்டம் - கே.ஆர். தோப்பூர், திருவள்ளுர் மாவட்டம் - அலமாதி, வேலூர் மாவட்டம் - திருவலம், தூத்துக்குடி மாவட்டம் – கயத்தாறு ஆகிய 5 இடங்களில் உள்ள 400/230 கி.வோ. துணை மின்நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள கூடுதல் அதிஉயரழுத்த மின்மாற்றிகள்;

சென்னை மாவட்டம்- வியாசர்பாடி, கோயம்பேடு, செங்கல்பட்டு மாவட்டம் - கடப்பேரி, சிறுசேரி, கடலூர் மாவட்டம் - கடலூர், காஞ்சிபுரம் மாவட்டம் – ஒரகடம், சிப்காட் மாம்பாக்கம், கிருஷ்ணகிரி மாவட்டம் - ஓசூர், மயிலாடுதுறை மாவட்டம்- கடலங்குடி, இராமநாதபுரம் மாவட்டம் - காவனூர், சிவகங்கை மாவட்டம்- காரைக்குடி, தஞ்சாவூர் மாவட்டம் - கும்பகோணம், திருவள்ளூர் மாவட்டம்- அம்பத்தூர் 3வது மெயின் ரோடு, திருப்பத்தூர் மாவட்டம் - விண்ணமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம் - ஆரணி, திருப்பூர் மாவட்டம் - திருப்பூர் ஆகிய 16 இடங்களிலுள்ள 230/110 கி.வோ. துணை மின்நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள கூடுதல் அதிஉயரழுத்த மின்மாற்றிகள்;

சென்னை மாவட்டம் - டைடல் பார்க், செங்கல்பட்டு மாவட்டம் - பல்லாவரம், பள்ளிக்கரணை, மெப்ஸ், டி.என்.எஸ்.சி.பி. பெரும்பாக்கம், திண்டுக்கல் மாவட்டம் - செங்குறிச்சி, ஈரோடு மாவட்டம் - பவானிசாகர், காஞ்சிபுரம் மாவட்டம் - பெரும்பாக்கம், கிருஷ்ணகிரி மாவட்டம் - உத்தனபள்ளி, சூலகிரி, தஞ்சாவூர் மாவட்டம் - திருப்புறம்பியம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்- தாத்தையங்கார்பேட்டை, முசிறி, கொப்பம்பட்டி, திருவள்ளுர் மாவட்டம் - பாடி, காக்களூர், திருவண்ணாமலை மாவட்டம் - சமுத்திரம், திருப்பூர் மாவட்டம் - ரசாதவலசு, பொங்கலூர், வேலூர் மாவட்டம் - பரவக்கல் ஆகிய 19 இடங்களிலுள்ள 110/33 கே.வி. துணை மின்நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள கூடுதல் அதிஉயரழுத்த மின்மாற்றிகள்;

செங்கல்பட்டு மாவட்டம் - ஊனமாஞ்சேரி, படப்பை சிறுசேரி, கடலூர் மாவட்டம் - ஓரையூர், திண்டுக்கல் மாவட்டம் - ரெங்கநாதபுரம், கள்ளக்குறிச்சி மாவட்டம்- பெத்தாசமுத்திரம், தியாகதுர்கம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, தேவரடியார் குப்பம், அரியலூர், ஆலத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் - வல்லம் வடகல், இருங்காட்டுக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டம் - நாகர்கோவில், கரூர் மாவட்டம் - சிந்தாமணிபட்டி, மதுரை மாவட்டம் - திருமங்கலம், ஆணையூர், வண்டியூர், நாமக்கல் மாவட்டம் - உப்புபாளையம், பரமத்திவேலூர், புதுக்கோட்டை மாவட்டம் - புதுக்கோட்டை, சேலம் மாவட்டம் - வேம்படிதாளம், வீரபாண்டி, சிவகங்கை மாவட்டம் - கானாடுகாத்தான், தென்காசி மாவட்டம் - வீரசிங்கமணி, தஞ்சாவூர் மாவட்டம் - திருநாகேஸ்வரம், தேனி மாவட்டம் - கடமலைகுண்டு ஆண்டிபட்டி தேனி, திருச்சிராப்பள்ளி மாவட்டம் - தொட்டியம், ஸ்ரீரங்கம், திருவள்ளூர் மாவட்டம் - அம்பத்தூர் சிட்கோ, கும்மிடிப்பூண்டி, ராமாபுரம், அலமாதி, செம்பரம்பாக்கம், மணலி, எண்ணூர் எஸ்.ஆர்.எம்.சி., திருவண்ணாமலை மாவட்டம் - விண்ணவனூர், மங்கள், ஆதமங்கலம், திருவண்ணாமலை, திருநெல்வேலி மாவட்டம்- மேலபாளையம், திருப்பூர் மாவட்டம் - கருவலூர், விருதுநகர்

மாவட்டம்- சிவகாசி ஆகிய 47 இடங்களிலுள்ள 110/11 மற்றும் 110/22 கே.வி. துணை மின்நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள கூடுதல் அதிஉயரழுத்த மின்மாற்றிகள்;

என மொத்தம் 638 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவில் 4,649 எம்.வி.ஏ. திறன் மேம்படுத்தப்பட்ட உயரழுத்த மற்றும் அதிஉயரழுத்த மின்மாற்றிகளின் செயல்பாட்டினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

தேரோடும் வீதிகள் மற்றும் கடலோர டெல்டா மாவட்டங்களில் உள்ள மேல்நிலை மின் கம்பிகளை மின் புதைவடங்களாக மாற்றும் பணிகள் முடிவுற்று தொடங்கி வைத்தல்

திருவிழாக்களின் போது முக்கிய கோவில்களின் தேரோடும் வீதிகளில் தேர் மற்றும் சுவாமி ஊர்வலங்களின் போது பக்தர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி மின் தடை செய்யப்பட்டு வந்தது. இதனால், குடியிருப்பாளர்கள் மற்றும் உள்ளூர் வர்த்தகர்களுக்கு தேவையின்றி மின்சாரம் தடைபட்டது. இத்தகைய சூழலை தவிர்க்கும் பொருட்டு, தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி முக்கிய தேரோடும் வீதிகளில் உள்ள மேல்நிலைக் கம்பிகளை பூமிக்கடியில் மின் புதைவடங்களாக மாற்றிடும் வகையில், கோயம்புத்தூர் மாவட்டம் - கோணியம்மன் திருக்கோவில், காஞ்சிபுரம் மாவட்டம் - காஞ்சி காமாட்சியம்மன் திருக்கோவில், ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில், வரதராஜ பெருமாள் திருக்கோவில், திருநெல்வேலி மாவட்டம்- நெல்லையப்பர் திருக்கோவில், நாமக்கல் மாவட்டம்- திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், மதுரை மாவட்டம் - திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், திருவண்ணாமலை மாவட்டம் - அண்ணாமலையார் திருக்கோவில் தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய தேரோடும் வீதிகளில் மேல்நிலை மின் கம்பிகளை 14 கோடியே 08 லட்சம் ரூபாய் செலவில் மின் புதைவடங்களாக மாற்றும் பணிகள் முடிக்கப்பெற்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

பேரிடர்கள் காலங்களில் முக்கிய சேவைகளான மருத்துவமனைகள், குடிநீர் விநியோக மையங்கள், தங்குமிடங்கள், தொலைதொடர்பு சாதனங்கள் போன்றவற்றிற்கு மின்சார விநியோகத்தை விரைவாக மீட்டெடுப்பதை உறுதி செய்திடும் வகையில், கடலோர டெல்டா மாவட்டங்களான திருவாரூர் மாவட்டம் - திருத்துறைப்பூண்டி 110/11 கி.வோ. துணைமின் நிலையத்திலிருந்து 33/11 கி.வோ. பெருகவாழ்ந்தான் துணைமின் நிலையம் வரையிலான 26.2 கி.மீ. நீளத்திற்கும், தஞ்சாவூர் மாவட்டம் - 110/33/11 கி.வோ. சேதுபவசத்திரம் துணைமின் நிலையத்திலிருந்து 33/11 கி.வோ. கல்லம்பட்டி துணைமின் நிலையம் வரையிலான 12.5 கி.மீ. நீளத்திற்கும், நாகப்பட்டினம் மாவட்டம் - ஆச்சாள்புரம் 110/33-11 கி,வோ, துணைமின் நிலையம் முதல் அரசூர் 33/11 கி.வோ. துணைமின் நிலையம் வரையிலான 11.01 கி.மீ. நீளத்திற்கும், வேதாரண்யம் 110/33-11 கி,வோ. துணைமின் நிலையம் முதல் 33/11 கி.வோ. வேட்டைக்காரனிருப்பு துணைமின் நிலையம் வரையிலான 30.74 கி.மீ. நீளத்திற்கும்,, வேதாரண்யம் 110/33-11 கி,வோ. துணைமின் நிலையம் முதல் 33/11 கி.வோ. ஆயக்காரன்புலம் துணைமின் நிலையம் வரையிலான 11.66 கி.மீ. நீளத்திற்கும், என 92.11 கி.மீ. நீளத்திற்கு மேல்நிலை மின் கம்பிகளை பூமிக்கடியில் மின் புதைவடங்களாக மாற்றும் பணிகள் 55 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவில் முடிக்கப்பெற்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒன்றியம், பழங்குடி குக்கிராமமான கத்திரிமலையில் சோலகா பழங்குடி சமூகத்தினர் வாழும் பகுதிக்கு மின்மயமாக்கல் திட்டம் தொடங்கி வைத்தல்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் 20.12.2024 அன்று ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், அந்தியூர் ஒன்றியத்திலுள்ள கத்திரிமலைப் பகுதி மலைகிராம மக்களின் நீண்டகாலக் கனவை நிறைவேற்றும் வகையில் மின் இணைப்பு வசதிகள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பின்படி, அந்தியூர் ஒன்றியத்தில் பழங்குடி குக்கிராமமான கத்திரிமலையில் சோலகா பழங்குடி சமூகத்தினர் 267 நபர்கள் அடங்கிய 76 குடும்பங்கள் மின்சார வசதியின்றி இருப்பதை அறிந்து, முதல் முறையாக மின்சாரம் வழங்குவதற்காக 271 மின் கம்பங்கள் நிறுவப்பட்டு காடுகள் நிறைந்த பகுதிகளில் அதிக பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை அளிக்கும் வகையிலான 8.34 கி.மீ. நீளமுள்ள உயர்மின்னழுத்த பாதை ஏ.பி.சி. எனப்படும் மேல்நிலை தொகுப்பு கேபிள் (Aerially Bunched Cable) வழியாக 100 கே.வி.ஏ. மின் மாற்றிகள் 3 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு, கத்திரிமலைப் பகுதி மலைகிராமத்தில் மின்மயமாக்கல் திட்டத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

பட்டுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட தாமரன்கோட்டை பிரிவு அலுவலகத்திற்கு புதிய கட்டடம் திறந்து வைத்தல்

தஞ்சாவூர் மின் பகிர்மான வட்டம், பட்டுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட தாமரன்கோட்டை பிரிவு அலுவலகத்திற்கு 85 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 26.02.2026 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளின் சார்பில் 8032.35 கோடி ரூபாய் செலவிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 1960.37 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், கூடுதல் தலைமை செயலாளர்/ தமிழ்நாடு மின்சார வாரிய நிறுவனங்களின் தலைவர் ஜெ. ராதாகிருஷ்ணன், எரிசக்தித் துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.