சென்னை,
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வருகிற 29ந்தேதி (சனிக்கிழமை) தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்து உள்ளார்.
சமீபத்தில், மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. தமிழக சட்டசபையில் அவற்றுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், அக்கட்சியின் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் பெறுகிறது.