தமிழக செய்திகள்

பாரதியார் உருவப்படத்திற்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி பாரதியார் உருவப்படத்திற்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை,

மகாகவி பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. பாரதியாரின் நுற்றாண்டு நினைவு நாளையொட்டி சென்னை, மெரினாவில் உள்ள பாரதியாரின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தங்கம் தென்னரசு, ஏ.வ.வேலு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்