தமிழக செய்திகள்

பெரியார் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

பெரியார் படத்திற்கு மலர் தூவி மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

தினத்தந்தி

சென்னை,

தந்தை பெரியாரின் 147-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை 'சமூக நீதி நாள் ஆக தமிழ்நாடு அரசு 2021-ல் அறிவித்திருந்தது. இந்நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தந்தை பெரியாரின் 147வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதி மொழியை மு.க.ஸ்டாலின் ஏற்றார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்