தமிழக செய்திகள்

நெல்லை தொகுதியில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்.. திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலையத்தில் கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது தொகுதியில் கட்சி செயல்பாடுகள், கள நிலவரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதன்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்-டூ-ஒன் சந்திக்கும் உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் இன்று சங்கரன்கோவில், நெல்லை தொகுதி திமுக நிர்வாகிகளை சந்தித்தார். அதில் தெற்கு மண்டல பொறுப்பாளர் கனிமொழி எம்.பி.யும் பங்கேற்றிருந்தார்.

இந்நிலையில் நெல்லை தொகுதியில் வெற்றி பெறவில்லையென்றால் பதவிகள் பறிக்கப்படும் என்று உடன்பிறப்பே வா சந்திப்பில் மாவட்டச் செயலாளர் உட்பட அனைத்து நிர்வாகிகளுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் SIR பணிகளில் உள்ள குழப்பங்களினால் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் உள்ளது என்பதால் வாக்காளர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகளுக்கு திமுகவினர் மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் நிர்வாகிகளிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்