தமிழக செய்திகள்

பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு கேரள முதல்-மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

கேரளாவில் 6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வாழும் கேரளாவின் ஆறு மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்த கோரிக்கை தொடர்பாக தங்கள் அன்பான உடனடி கவனத்தை ஈர்க்க விழைகிறேன். கடந்த 12 ஆண்டுகளாக கேரள அரசு ஜனவரி 14-ஆம் நாள் பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறை அறிவித்து வருகிறது என்று அறிகிறேன். ஜனவரி 14ஆம் தேதி தை தமிழ் மாதத்தின் முதல் நாளாகும். ஆனால் இந்த 2022 ஆம் ஆண்டில் ஜனவரி 15 ஆம் நாளினை இந்த ஆறு மாவட்டங்களில் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே தமிழ் சமூகங்களுக்கிடையே உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை உள்ளூர் விடுமுறை தினமாக ஜனவரி 14ஆம் நாளை அறிவித்திட நடவடிக்கை மேற்கொள்ள நான் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று அதில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்