தமிழக செய்திகள்

அச்சு வெல்லம் தயாரிக்கும் விவசாயிகளுடன் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கலந்துரையாடல்

புவிசார் குறியீடு பெற நடவடிக்கை என அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அச்சு வெல்லம் தயாரிக்கும் விவசாயிகளுடன் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கலந்துரையாடினார்.

புவிசார் குறியீடு பெற நடவடிக்கை என அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அச்சு வெல்லம் தயாரிக்கும் விவசாயிகளுடன் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கலந்துரையாடினார்.

புவிசார் குறியீடு

தமிழக அரசு சமீபத்தில் சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதில் பாபநாசம் அருகே உள்ள வீரமாங்குடியில் தயாராகும் அச்சுவெல்லத்துக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த 24-ந் தேதி நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, வீரமாங்குடி அச்சுவெல்லத்துக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்தார்.

கலந்துரையாடல்

மேலும் கரும்பு பயிர்கள் மஞ்சள் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதால், கரும்பு பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் நேற்று வீரமாங்குடிக்கு வந்த ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., அச்சுவெல்லம் தயாரிப்பாளர்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்து பேசினார். அப்போது கரும்பை தாக்கும் மஞ்சள் நோய் பாதிப்பு குறித்து சட்டசபையில் பேசியது குறித்தும், துறை ரீதியாக மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.

அப்போது தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் தஞ்சை பாதுஷா, மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் முகமது ரிபாயி, தி.மு.க. ஒன்றிய பொருளாளர் பரமசிவம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், விவசாயி மாரியப்பன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட விவசாய அணி செயலாளர் பாரூக் ஆகியோர் உடன் இருந்தனர்.