தமிழக செய்திகள்

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 11-ந்தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.