சென்னை
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மகத்தான ஆதரவை தந்துள்ளனர். ராகுல்காந்தியின் கடும் உழைப்பு பயன் தந்துள்ளது.
பாஜகவிற்கு மாற்று காங்கிரஸ் என்றும், பிரதமர் மோடிக்கு மாற்று ராகுல் காந்தி என இந்த தேர்தலில் நிரூபணமாகியுள்ளது.
காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டுமென, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஏமாற்றத்தின் விரக்தியில் பேசுகிறார்.
வாக்குறுதியை நிறைவேற்றாததால் மோடி அலை ஓய்ந்து விட்டது. பாராளுமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதா தோல்வியை தழுவும். இவ்வாறு அவர் கூறினார்.