தமிழக செய்திகள்

மோகனூர் பகுதியில் கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாள் அனுசரிப்பு

மோகனூர் பகுதியில் கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாள் அனுசரிப்பு

தினத்தந்தி

மோகனூர்:

கிறிஸ்தவர்கள் ஆண்டுதேறும் நவம்பர் மாதம் 2-ந் தேதியை கல்லறை திருநாளாக அனுசரித்து வருகின்றனர். அன்றைய தினம் கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்டங்களுக்கு சென்று உறவினர்கள் மற்றும் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையை சுத்தம் செய்வர். இதையடுத்து கல்லறைகளை மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்வர்.

அதன்படி நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியை சேர்ந்த கிறிஸ்தவர்கள் காட்டுப்புத்தூர் சாலையில் உள்ள தேவாலய வளாக கல்லறை தோட்டத்துக்கு சென்று பிரார்த்தனை செய்தனர். இதேபோல் ஆர்.சி.பேட்டப்பாளையத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்டத்துக்கு சென்று உறவினர்கள் மற்றும் முன்னோர்களின் கல்லறையை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.

முன்னதாக பங்குத்தந்தை ஜான் போஸ்கோ பால் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது குறிப்பிடத்தக்கது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு