தமிழக செய்திகள்

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி கூடத்தில் கண்காணிப்பு குழு ஆய்வு

தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது.

தினத்தந்தி

தூத்துக்குடி,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையடுத்து தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் இருக்கும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்க அனுமதி அளித்து தமிழக அரசு சார்பில் கடந்த 29-ந்தேதி அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் கண்காணிப்பு குழுவும் அமைத்து அரசு உத்தரவிட்டது.

இதனால் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, தேவையான அனுமதிகளை வழங்கினர். மேலும், தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின் இணைப்பு வழங்குவது தொடர்பாகவும் ஆய்வுகளை நடத்தினர். ஆனால், இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் தேவையான அனைத்து முன் இயக்க சோதனைகளும் செய்யப்பட்டு தற்போது தயார் நிலையில் உள்ளது. மின் இணைப்பு கொடுக்கப்பட்டதும் உடனடியாக ஆக்சிஜன் உற்பத்திக்கான பணிகளை தொடங்க தயாராக இருக்கிறோம் என்று கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி கூடத்தில் கண்காணிப்பு குழு இன்று ஆய்வு மேற்கொண்டது. உதவி ஆட்சியர் சிம் ரஞ்சித் சிங், மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்