தமிழக செய்திகள்

மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை

தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்தைச் சேர்ந்த சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை (19.5.2026, செவ்வாய்க்கிழமை) மின்வாரிய அவசர மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தூத்துக்குடி நகர்ப்புற விநியோகச் செயற்பொறியாளர் அலுவலகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

மடத்தூர், மடத்தூர் மெயின் ரோடு, முருகேசநகர், கதிர்வேல்நகர், தேவகிநகர், சிப்காட் வளாகம், திரவிய ரத்தினநகர், அசோக்நகர், ஆசிரியர்காலனி, ராஜீவ்நகர், சின்னமணிநகர், 3-ஆவது மைல், புதுக்குடி, டைமண்ட் காலனி, இ.பி.காலனி, ஏழுமலையான்நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள், அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு குடியிருப்புகள், ராஜகோபால்நகர், பத்திநாதபுரம், சங்கர்காலனி,

எஃப்.சி.ஐ. குடோன் பகுதிகள், நிகிலேசன்நகர், சோரிஸ்புரம், மதுரை பைபாஸ் ரோடு, ஆசீர்வாதநகர், சில்வர்புரம், சுப்பிரமணியபுரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசர்நகர், ராஜரத்தினநகர், பாலையாபுரம், வி.எம்.எஸ்.நகர், முத்தம்மாள்காலனி, நேதாஜிநகர், லூசியாகாலனி, மகிழ்ச்சிபுரம், ஜோதிநகர், பால்பாண்டிநகர், முத்துநகர், கந்தன்காலனி, காமராஜ்நகர், என்.ஜி.ஓ.காலனி,

அன்னைதெரசாநகர், பர்மாகாலனி, டி.எம்.பி.காலனி, அண்ணாநகர் 2-வது மற்றும் 3-வது தெரு, கோக்கூர், சின்னக்கண்ணுபுரம், பாரதிநகர், புதூர்பாண்டியாபுரம் மெயின் ரோடு, கிருபைநகர், அகில இந்திய வானொலி நிலையம், ஹரிராம்நகர், கணேஷ்நகர், புஷ்பாநகர், கல்லூரிநகர், ஸ்டெர்லைட் குடியிருப்புகள், எட்டையபுரம் ரோடு வடபகுதி, டி-மார்ட் வணிக வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.