தமிழக செய்திகள்

ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்டோர் ஆயுள் விருத்தி ஹோமம் செய்தனர்

திருக்கடையூர் அமிர்தகடஸேவரர் கோவிலில் நேற்று ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்டோர் ஆயுள் விருத்தி ஹோமம் செய்து கொண்டதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

தினத்தந்தி

திருக்கடையூர்:

திருக்கடையூர் அமிர்தகடஸேவரர் கோவிலில் நேற்று ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்டோர் ஆயுள் விருத்தி ஹோமம் செய்து கொண்டதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

அமிர்தகடேஸ்வரர் கோவில்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்த கோவிலில் மட்டுமே மணிவிழா, சதாபிஷேகம், ஆயுள்ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது.

ஆயுள் விருத்தி ஹோமம்

இந்த நிலையில் நேற்று திடீரென வெளிமாநிலம், வெளிமாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வந்து தங்கள் ஆயுள் விருத்திக்காக மணிவிழா, சதாபிஷேகம், ஆயுள் விருத்தி ஹோமம், சஷ்டியபூர்த்தி. யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவைகள் செய்து கொண்டனர். இதனால் கோவிலில் சுமார் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது.

பக்தர்கள் கூட்டம்

கோவில் வளாகம், சன்னதி வீதி, மேலவீதி, கீழவீதி, வடக்கு மடவளாகம், தெற்கு மடவளாகம், கடைவீதி, உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

பக்தர்கள் வாகனங்களில் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மக்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பொறையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்