தமிழக செய்திகள்

மதுரையில் இன்று மேலும் 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மதுரையில் இன்று மேலும் 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இந்தசூழலில் மதுரையிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் மதுரையில் இன்று மேலும் 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 2,302 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 250 பேருக்கு கொரோனா இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,552 ஆக உயர்ந்துள்ளது.

மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது போல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை மதுரையில் 29 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள். இதுவரை 609 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்