சென்னை,
கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் ஆக்சிஜன், படுக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் பல இடங்களில் நிகழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் சென்னை அண்ணா நகர் 3-வது அவென்யூவில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றை அதன் நிர்வாகத்தினர் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையமாக மாற்றியுள்ளனர். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கை, ஆக்சிஜன் உள்ளிட்ட வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதனை கொரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்துவதற்கு தமிழக அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கூறுகின்றனர். தமிழக அரசின் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் மேற்பார்வையில் முழுமையான கொரோனா தனிமைப்படுத்துதல் மையமாக பள்ளிவாசல் செயல்படும் என்று அதன் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.