தமிழக செய்திகள்

சென்னையில் பைக்கில் இருந்து தவறி மழை நீர் கால்வாயில் விழுந்து தாய் மகள் உயிரிழந்த விவகாரம்- மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னையில் பைக்கில் இருந்து தவறி மழை நீர் கால்வாயில் விழுந்து தாய் மகள் உயிரிழந்த விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை,

சென்னையில் பைக்கில் இருந்து தவறி மழை நீர் கால்வாயில் விழுந்து தாய் மகள் உயிரிழந்த விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் விடுத்துள்ளது.

மாநகராட்சி ஆணையர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் 3 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என மனித உரிமை ஆணைய நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கழிப்பறை தொட்டியில் தவறி விழுந்து வேளாண் துறை பெண் உதவியாளர் பலியான விவகாரத்திலும் வேளாண் துறை இயக்குனர் விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.