தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தாய்-மகன் படுகாயம்

போடிமெட்டு மலைப்பாதையில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தாய்-மகன் படுகாயம் அடைந்தனர்.

போடி குலாளர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வி (வயது 52). இவரது மகன் அஜித் (16). இவர்களுக்கு கேரள மாநிலம் பேத்தொட்டடியில் ஏலக்காய் தோட்டம் உள்ளது. இருவரும் அங்கு தங்கி இருந்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை செல்வி, தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் போடிமெட்டு மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தார். அப்போது 16-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தவறி கீழே விழுந்தனர். இதில் படுகாயமடைந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக செல்வி தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு