தமிழக செய்திகள்

தாய்மாமாவின் 100-வது பிறந்த நாள்: நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது தாய்மாமாவின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

திருவாரூர்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தலைநகர் சென்னை தொடங்கி குமரி வரை பரவலாக மழை கொட்டி வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது.

இந்த அதீத கனமழையால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது தாய்மாமாவின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து, நலம் விசாரித்தார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கோவில் திருமாளம் பகுதியில் தாய்மாமா தெட்சிணாமூர்த்தியை நேரில் சந்தித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரிடம் ஆசி பெற்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்