தமிழக செய்திகள்

மின்மோட்டார் திருட்டு

மின்மோட்டார் திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள தகட்டூர் பண்டார தேவன்காடு பகுதியில் வசிப்பவர் பூமிநாதன். விவசாயி. இவர் தனது நிலத்தில் எள் மற்றும் கடலை பயிரிட்டிருந்தார். இதற்கு ஆற்றில் இருந்து தண்ணீர் இறைப்பதற்காக வீட்டின் அருகில் மின்மோட்டார் பொருத்தி இருந்தார். சம்பவத்தன்று இரவு மர்ம நபர்கள் அந்த மோட்டாரை திருடிச்சென்றனர். இதுகுறித்து அவர் வாய்மேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டாரை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT