கோப்பு படம் 
தமிழக செய்திகள்

கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சாகசம்; 2 பேர் கைது

சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் சாகசத்தில் ஈடுபடுவதாக அடையாறு போக்குவரத்து போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து நேற்று போலீசார் கிழக்கு கடற்கரை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வெட்டுவாங்கேணி பஸ் நிறுத்தம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் வேலை செய்யும் தியாகராஜன் (வயது 23), ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்த பொக்லைன் டிரைவர் முத்துக்குமார் (வயது 20) என தெரிய வந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது