தமிழக செய்திகள்

காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்-பஸ் மோதல்; அண்ணன் பலி - தங்கை படுகாயம்

காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்- பஸ் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார்.

தினத்தந்தி

மோட்டார் சைக்கிள்-பஸ் மோதல்

காஞ்சீபுரம் அடுத்த திம்மசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட ஜினகாஞ்சி நகரில் வசித்து வந்தவர் பாலாஜி (வயது 57). சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அரசு பட்டு வளர்ச்சி துறையில் ஜீப் டிரைவராக பணிபுரிந்து வந்தார். பாலாஜி தனது தங்கை ஆஷாபீபியுடன் மோட்டார் சைக்கிளில் காஞ்சீபுரத்தில் இருந்து திம்ம சமுத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஒலிமுகமது பேட்டை அருகே வெள்ளை கேட் பகுதியில் செல்லும்போது எதிர்திசையில் அதிவேகமாக வந்த தனியார் தொழிற்சாலை பஸ் பாலாஜி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

சாவு

இதில் பாலாஜியும் அவரது தங்கையும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களை டாக்டர்கள் பரிசோதித்த போது பாலாஜி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரியவந்தது. பாலாஜியின் தங்கைக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்