தமிழக செய்திகள்

தனியார் கல்லூரி பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - மாணவர் காயம்

அம்மாபேட்டை அருகே நின்றிருந்த கல்லூரி பஸ் மீது மோட்டார் சைக்கிளில் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் காயம் அடைந்து உள்ளார்.

தினத்தந்தி

சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்துள்ள கோட்டையூரை சேர்ந்த கல்லூரி மாணவர் கார்த்திக்(21.) ஈரோடு தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இன்று காலை வழக்கம்போல் கார்த்திக் தனது மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். காலை 7.30 மணியளவில் அம்மாபேட்டை அருகே மாணிக்கம்பாளையம் பிரிவில் தனியார் கல்லூரி பஸ் ஒன்று மாணவிகளை ஏற்றிக்கொண்டு நின்று கொண்டிருந்தது.

பின்னால் வந்த கல்லூரி மாணவர் எதிர்பாராத விதமாக கல்லூரி வாகனத்தின் பின்புறம் மோதியதில் மோட்டார் சைக்கிள் உள்ளே புகுந்து. மாணவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் அப்பகுதியினர் உடனடியாக மாணவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்