தமிழக செய்திகள்

காஞ்சிபுரம்: லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - ராணுவ வீரர் உயிரிழப்பு...!

காஞ்சிபுரம் அருகே லாரியின் பின்னால் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ராணுவ வீரர் உயிரிழந்து உள்ளார்.

காஞ்சிபுரம்,

வேலூர் மாவட்டம் காட்பாடி வந்தவம்தாங்கள் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (24). இவர் பஞ்சாப் மாநிலத்தில் ராணுவத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். தற்போது ஒரு மாதம் விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் தனது மோட்டார் சைக்கிளில் தமிழரசன் சென்னைக்கு சென்றுவிட்டு இன்று வேலூர் திரும்பி கொண்டிருந்தார். காஞ்சிபுரம் அருகே சித்தேரிமேடு என்ற இடத்தில் வந்தபோது முன்னால் சென்ற கொண்டு இருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி உள்ளது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தமிழரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த பாலுச்செட்டிச்சத்திரம் போலீசார் விரைந்து வந்த உயிரிழந்த தமிழரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பார்த்திபன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சதீஷ்குமார் (30) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு