சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே தச்சமொழி தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 40). கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது வீட்டு முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி, மோட்டார் சைக்கிள் திருடியதாக பழனியப்பபுரத்தை சேர்ந்த முத்து மகன் ஐகோர்ட் (40), அவரது சகோதரர் காமராஜ் (50) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.