திருக்கழுக்குன்றம்,
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த தேசுமுகிப்பேட்டையை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் ஹரி (வயது 24). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக கல்பாக்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கொத்திமங்களம் பைபாஸ் மதுக்கடை எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த ஹரி பலத்த காயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவ்வாறு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.