தமிழக செய்திகள்

மோட்டார்சைக்கிள்கள் மோதல்: முன்னாள் ராணுவ வீரர் பலி

நிலக்கோட்டை அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பலியானர்.

தினத்தந்தி

நிலக்கோட்டை அருகே உள்ள வெங்கடாஸ்திரி கோட்டையைச் சேர்ந்தவர் செல்வ பெருமாள் (வயது 59). முன்னாள் ராணுவ வீரர். நேற்று இவர், நிலக்கோட்டையில் இ்ருந்து மோட்டார்சைக்கிளில் வெங்கடாஸ்திரி கோட்டைக்கு சென்று கொண்டிருந்தார். நிலக்கோட்டை-வத்தலக்குண்டு சாலையில் மணியகாரன்பட்டி அருகே சென்றபோது எதிரே மீனாட்சிபுரத்தை சேர்ந்த தனபாண்டி என்பவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள், இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயமடைந்தனர். பின்னர் அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் செல்வபெருமாள் ஏற்கனவே இ்றந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு