தமிழக செய்திகள்

மனைவி இறந்த துக்கத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை திருமணமான 2 மாதத்தில் சோகம்

திருமணமான 2 மாதத்தில் மனைவி இறந்த துக்கத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள சின்னமாடன்குடியிருப்பு மேற்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 28). பனை ஏறும் தொழிலாளி.

இவருக்கும்,நெல்லை மாவட்டம் ஆயன்குளத்தை சேர்ந்த நந்தினி (23) என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி திருமணம் நடந்தது. புதுமண தம்பதியான இவர்கள் சின்னமாடன்குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி நந்தினிக்கு திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை வீட்டில் உள்ளவர்கள் ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலயே நந்தினி பரிதாபமாக இறந்தார்.

இதனால் முத்துகிருஷ்ணன் மனம் உடைந்து காணப்பட்டார். அவர் வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார். மனைவி இறந்த துக்கத்தில் இருந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

நேற்று முன்தினம் காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து முத்து கிருஷ்ணன் மயங்கி கிடந்தார்.

உடனடியாக முத்துகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலையில் முத்துகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு