தமிழக செய்திகள்

சென்னை விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு

இதேபோன்று மேலும் 36 நகரும் படிகட்டுகள் பல்வேறு மெட்ரோ ரெயில் நிலையங்களில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

ஆலந்தூர்:

சென்னை விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து, திரிசூலம் ரெயில் நிலையம் செல்லவும், அங்கிருந்து வெளியே வரவும் ரூ.80 லட்சம் மதிப்பில் புதிதாக நகரும் படிக்கட்டு அமைக்கப்பட்டு உள்ளது.

அத்துடன் ரூ.1 லட்சம் மதிப்பில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை மற்றும் ரூ.6 லட்சம் மதிப்பில் காற்றிலிருந்து குடிநீர் எடுக்கும் எந்திரம் அமைக்கப்பட்டு உள்ளது.

இதனை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன இயக்குனர் (அமைப்புகள் மற்றும் இயக்கம்) ராஜேஷ் சதுர்வேதி திறந்துவைத்தார். இதில் முதன்மை பொதுமேலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன், கூடுதல் பொதுமேலாளர் எஸ்.கே.மாதவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதேபோன்று மேலும் 36 நகரும் படிகட்டுகள் பல்வேறு மெட்ரோ ரெயில் நிலையங்களில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு