தமிழக செய்திகள்

முளைப்பாரி ஊர்வலம்

முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

தினத்தந்தி

சாயல்குடி, 

கடலாடி இந்திரா நகர் 2-வது தெருவில் நாதஸ்வர நையாண்டி மேளகார இந்து பறையர் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட சந்தன மாரியம்மன், கருப்பணசாமி, செல்வ விநாயகர் கோவில் முளைப்பாரி பொங்கல் உற்சவ விழா நடைபெற்றது. கடந்த 18-ந் தேதி கடற்கரை சென்று தீர்த்த நீராடி கொடியேற்றத்துடன் அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனை நடந்தது.

நேற்று முன் தினம் நடந்த 108 திருவிளக்கு பூஜையில் பெண்கள் கலந்து கொண்டனர். சோம விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. அக்னி சட்டி, ஆயிரம் கண் பானை, அழகுவேல், பூக்குழி இறங்குதல், பூத்தட்டு உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் நிறைவேற்றினா. நேற்று முளைப்பாரி எடுத்து பெண்கள் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கங்கை நீரில் கரைத்தனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து