தமிழக செய்திகள்

முல்லை பெரியாறு அணை விவகாரம்: சட்டசபையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்

முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.

தினத்தந்தி

சென்னை,

முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

முல்லைப் பெரியாறு ஒப்பந்தம் போடப்பட்டு 136 ஆண்டுகள் ஆகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நீதிமன்றம் அனுமதி அளித்தது.

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தற்போது நடைபெறும் சம்பவங்கள் ஏற்புடையதாக இல்லை. பேபி அணை, முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்தும் தமிழ்நாட்டு அரசின் முயற்சிக்கு கேரள அரசு ஏராளமான தடைகளை விதித்து வருகிறது.

கேரள அரசின் நட்பை பயன்படுத்தி, முல்லை பெரியாறு அணையின் முழு கொள்ளளவை அதிகரிக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும். 5 மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ள முல்லைப் பெரியார் அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்