சென்னை,
மராட்டியத்தின் மும்பையை சேர்ந்த பிரபல மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் முன்னாள் இயக்குநருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று திடீர் சோதனை நடத்தினர். இதற்காக சென்னை, மும்பை, ஐதராபாத் மற்றும் கடலூர் உள்ளிட்ட 16 இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் கணக்கில் காட்டப்படாத ரூ.450 கோடி மதிப்பிலான சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இதேபோன்று, மொரீசியஸ் நாட்டில் ரூ.2300 கோடி முதலீடு செய்து முதலீட்டுக்கான லாப தொகையை மறைத்ததும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.