தமிழக செய்திகள்

சென்னையில் இன்று மாலை 6 மணி முதல் டீக்கடைகளை மூட மாநகராட்சி ஆணையர் உத்தரவு

சென்னையில் இன்று மாலை 6 மணி முதல் டீக்கடைகளை மூட மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மக்கள் அவசியம் இல்லாமல் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் இன்று மாலை 6 மணியுடன் டீக்கடைகளை மூட சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு வழிமுறைகளுடன் மளிகை பொருட்கள், காய்கறிகளை மட்டும் டோர் டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சமைத்த உணவு பொருட்களை டோர் டெலிவரி செய்யும் ஆன்லைன் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது