தமிழக செய்திகள்

பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் இருப்பதாக புகார் -உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்

முரசொலி அலுவலக நில விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சென்னை:

தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி, கோடம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இதன் நிர்வாக இயக்குனராக உதயநிதி ஸ்டாலின் இருந்து வருகிறார்.

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக பாஜக புகார் தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக, பா.ஜ.க. மாநில செயலாளர் சீனிவாசன் தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையத்தில் புகார் மனு அளித்தார்.

இந்நிலையில், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் தொடர்பாக அதன் நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலினிடம் பட்டியல் இனத்தவர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் வரும் 19-ம் தேதி விசாரணை நடத்த உள்ளார். சாஸ்திரி பவனில் உள்ள அலுவலகத்தில் இந்த விசாரணை நடக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்