தமிழக செய்திகள்

முரசொலி அலுவலக அவதூறு வழக்கு: மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஆஜராக உத்தரவு

முரசொலி அலுவலக இடம் பற்றிய அவதூறு வழக்கில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் நேரில் ஆஜராக சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

பா.ஐ.க. முன்னாள் மாநில தலைவரும், மத்திய மந்திரியுமான எல்.முருகன் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 29-ந்தேதி வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, முரசொலி நாளிதழ் அலுவலக நிலம் தொடர்பாகவும், தி.மு.க. குறித்தும் எல்.முருகன் அவதூறாக பேசியதாக அவர் மீது தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எழும்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் ஒரு கோடி இழப்பீடு கேட்டிருந்தார்.

தற்போது எல்.முருகன் மத்திய மந்திரி என்பதால், இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது. அப்போது முரசொலி அறக்கட்டளை சார்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஏப்ரல் 22-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்