தமிழக செய்திகள்

ஊத்தங்கரை அருகேவிவசாயி கல்லால் தாக்கி கொலைபொக்லைன் டிரைவருக்கு வலைவீச்சு

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை அருகே விவசாயி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.

வாய்த்தகராறு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா சாமல்பட்டி அருகே உள்ள கே.பாப்பாரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் (வயது 60). விவசாயி. அதே கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (32). உறவினரான இவர் கேரளாவில் பொக்லைன் எந்திர டிரைவராக வேலை செய்து வருகிறார்.

தற்போது மகேந்திரன் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கே.மோட்டூர் பகுதியில் பன்னீர் மற்றும் மகேந்திரன் ஆகியோர் ஒன்றாக மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றவே ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

கொலை

அப்போது ஆத்திரத்தில் இருந்த பன்னீர், மகேந்திரனின் மொபட்டை மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தாராம். இதனால் கோபமடைந்த மகேந்திரன் அங்கு கிடந்த கல்லை எடுத்து பன்னீரின் தலையில் பயங்கரமாக தாக்கினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மகேந்திரன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இந்த கொலை குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சாமல்பட்டி போலீசார் பன்னீரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மகேந்திரனை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடைய கொலையாளியை விரைவில் பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு அவர்களும் தேடி வருகின்றனர். விவசாயி கல்லால் தாக்கி கொல செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்