தமிழக செய்திகள்

பெண் உள்பட 3 பேர் கைது

அம்மாப்பேட்டை அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அம்மாப்பேட்டை;

அம்மாப்பேட்டை அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

வெட்டிக்கொலை

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே மெலட்டூர் வெண்ணுக்குடியை சேர்ந்தவர் தனபால். இவருடய மகன் கோபி என்ற இளங்கோ(வயது31). இவர் அம்மாப்பேட்டை மேட்டுத் தெருவிலுள்ள தனது அத்தை வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் இளங்கோ கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மாப்பேட்டை முருகன் கோவில் அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இளங்கோ கொலை தொடர்பாக அம்மாப்பேட்டையை சேர்ந்த பாபு என்ற ஆனந்த பாபு(30), பிரவீன்(24), திருவாரூர் மாவட்டம் மணக்கால் பகுதியை சேர்ந்த மதன்(24) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

3 பேர் கைது

இளங்கோ கொலை வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சேர்மாநல்லுர் பகுதியை சேர்ந்த ராஜா மகன் பாபு(24), 17 வயது சிறுவன், அருந்தவபுரம் வடக்கு நேர் தெரு பகுதியை சேர்ந்த முருகேசன் மனைவி உமா (35) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். இளங்கோ கொலை தொடர்பாக தலைமறைவாக உள்ள வடபாதி, உடையார்கோவில் பகுதியை சேர்ந்த அனீஸ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு