தமிழக செய்திகள்

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் முருகன், கருப்பசாமிக்கு மே. 14 வரை நீதிமன்ற காவல்

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் முருகன், கருப்பசாமியை மே. 14 வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #NirmalaDeviIssue

தினத்தந்தி

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து பேராசிரியை நிர்மலாதேவி செல்போனில் பேசிய ஆடியோ பதிவு சமூகவலைதளங்கள் மூலம் தமிழகம் முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னரே போலீசார் இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் புகார் பெற்று நிர்மலாதேவியை கைது செய்தனர்.

தமிழக அரசு இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றிய நிலையில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணை குழுவை அமைத்தார்.இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பேராசிரியை நிர்மலாதேவியையும், அவர் தன்னை செல்போனில் பேசத்தூண்டியதாக சுட்டிக்காட்டிய மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரையும் கைது செய்தனர்.

மூவரையும் போலீஸ் காவலில் எடுத்தும் விசாரித்தனர்.இன்று (திங்கட்கிழமை) போலீஸ் காவல் முடிந்து முருகனும், கருப்பசாமியும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். கருப்பசாமி மற்றும் முருகன் ஆகிய இருவரையும் மே 14 வரை நீதிமன்ற காவலில் வைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை