தமிழக செய்திகள்

சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் உயிரிழப்பு

திருச்சி ஜீயபுரத்தில் நடந்த சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா பலியாகியுள்ளார்.

திருச்சி, 

திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும், முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா  சென்ற  காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. காரின் டயர் வெடித்ததால் எதிர்பாராமல் ஏற்பட்ட இந்த விபத்தில், பலத்த காயமடைந்த வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.  வருவாய் கோட்டாட்சியர்  உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தகவல் அறிந்ததும், திருச்சி கலெக்டர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். சாலை விபத்தில் வருவாய் கோட்டாட்சியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு