தமிழக செய்திகள்

முத்துமாரியம்மன் கோவில் தீ மிதி விழா

முத்துமாரியம்மன் கோவில் தீ மிதி விழா நடைபெற்றது.

தினத்தந்தி

பொன்னமராவதி அருகே கல்லம்பட்டியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பூச்சொரிதல் விழா மற்றும் தீமிதி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து நேற்று இரவு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் விரதம் இருந்த பக்தர்கள் அலகுகுத்தியும், பால்குடம், காவடி எடுத்தும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் கல்லம்பட்டி, மேலக்கல்லம்பட்டி, மூக்கழகன்பட்டி மேட்டாம்பட்டி, பனையமங்களப்பட்டி, நகரப்பட்டி, வடக்கிப்பட்டி, வடகாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்