மதுரை,
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே எஞ்சியுள்ளதால் தற்போதே தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், வரும் தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும். கட்சி தொடங்குவது குறித்து எனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். பாஜகவில் நான் இணைவதாக வெளிவரும் தகவல் வதந்தியே என்றார்