தமிழக செய்திகள்

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எனது பயணம் தொடரும் - சி. விஜயபாஸ்கர் பேட்டி

எனக்கு தொகுதி மக்கள்தான் முக்கியம். தொகுதி மக்களின் முடிவுதான் என் முடிவு என சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை,

தமிழக சட்டமன்ற தேர்தலில் 47 இடங்களில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வில் பொதுச்செயலா ளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 எம்.எல்.ஏ.க்கள் ஒரு அணியாகவும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்.எல்.ஏ.க்கள் ஒரு அணியாகவும் செயல்பட்டனர்.

சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்ற தகவல் பரவி வந்தது. ஆனால் இதனை வேலுமணி தரப்பினரும், த.வெ.க. தரப்பினரும் மறுத்து வந்தனர்.

எடப்பாடி பழனிசாமி அணி பலம் கூடியது

இந்தநிலையில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான அணியில் அதிரடி திருப்பம் ஏற்பட்டது. தாராபுரம் சத்தியபாமா, மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தனர்.

இதேபோல எம்.எல்.ஏ.க்கள் ஆற்காடு சுகுமார், பண்ருட்டி மோகன், காங்கயம் நடராஜன், சங் கரன்கோவில் திலீபன், அந்தியூர் ஹரிபாஸ்கர், ஓசூர் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் அணி மாறி, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் மன்னிப்பு கடிதமும் வழங்கி னர். இதனால் எஸ்.பி.வேலுமணி தரப்பில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 15 ஆக குறைந்தது. எடப்பாடி பழனிசாமி அணியில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது. எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது.

இதையடுத்து அ.தி.மு.க.வில் இரு பிரிவு அணிகளையும் இணைக்க எஸ்.பி.வேலுமணி தரப்பில் முயற்சி மேற்கொண்டனர். நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் எஸ்.பி.வேலுமணி தரப்பில் நத்தம் விஸ் வநாதன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர் தங்கமணி சந்தித்து பேசினர்.

கட்சியில் தங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பதவிகளை மீண்டும் வழங்க வேண்டும் எனவும், கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக சபாநாயகரிடம் கொடுக்கப்பட்ட கடிதத்தையும் திரும்ப பெறவும் வலியுறுத்தினர். ஆனால் இதனை எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்ததாக தகவல் வெளியானது.

சமரச பேச்சுவார்த்தை

இந்த நிலையில் மீண்டும் சமரச பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது. சென்னை எம்.ஆர்.சி.நகரில் சி.வி.சண்முகம் வீட்டில் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் நேற்று காலை ஆலோசனை மேற்கொண்டனர்.

இதற்கிடையில் அ.தி.மு.க.வின் ஐ.டி.விங்க் சமூக வலைதள எக்ஸ் பக்கத்தில், இனி நமக்குள் பிரிவில்லை... இந்த எக்கு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை.... என இரு அணிகளும் ஒன்று சேர்ந்து விட்டதாக பதிவு வெளியிடப்பட்டது. இது அ.தி.மு.க.வில் இருந்த குழப்பத்திற்கும், பிரிவுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது.

சென்னை எம்.ஆர்.சி. நகரில் சி.வி.சண்முகம் வீட்டில் இருந்து எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், காமராஜ், லீமாரோஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு நேற்று மதியம் 12.20 மணி அளவில் சென்றனர். அங்கு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மன்னிப்பு கடிதத்தை வழங்கி இணைந்தனர். இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் செல்லவில்லை. சி.விஜயபாஸ்கர் தலை மைச்செயலகத்திற்கு நேரடியாக சென்றிருந்தார். ஆனால் சி.வி.சண்முகம் சென்னை பால வாக்கம் வீட்டில் இருந்தார்.

இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க சி.வி.சண்முகம் வர மறுத்ததாக கூறப்படுகிறது. அவரை தங்கமணி நேரில் சென்று சமாதானப்படுத்தினார். பின்னர் எம்.ஆர்.சி. நகரில் உள்ள வீட்டுக்கு சி.வி.சண்முகத்தை ஒரே காரில் அவர் அழைத்து வந்தார். அங்கு எஸ்.பி.வேலுமணியும், மற்ற எம்.எல்.ஏ.க்களும் வந்தனர். சி.வி.சண்முகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானப்படுத்த முயன்றனர். அ.தி.மு.க.வில் அவரும் ஒன்றிணைந்திருப்பதாக எஸ்.பி.வேலுமணி தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் பேச்சுவார்த்தை முடிந்தபின் சி.வி.சண்முகம் வீட்டில் இருந்து வெளியே வந்தார். அவரிடம் நிருபர்கள் கேள்வி கேட்க முயன்றபோது, 'தற்போது நான் எதுவும் பேச விரும்பவில்லை' எனக்கூறி எந்த பதிலையும் தெரிவிக்காமல் காரில் ஏறி அவர் கோபத்துடன் புறப்பட்டு சென்றார். அவர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைய விருப்பம் இல்லாமல் மறுத்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், புதுக்கோட்டை இலுப்பூரில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்தபின் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

எனக்கு தொகுதி மக்கள்தான் முக்கியம். தொகுதி மக்களின் முடிவுதான் என் முடிவு. நிர்வாகிகள் வேகமாக இருக்கிறார்கள் நான் அவர்களை பொறுமையாக இருக்க சொல்லியிருக்கிறேன்.

எனது ஆதரவாளர்கள் நிறைய கருத்துகளை கூறினார்கள். அனைத்தையும் கேட்டிருக்கிறேன். 500க்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆலோனை மேற்கொண்டார். தவெகவில் இணைகிறீர்களா? என்ற கேள்விக்கு யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எனது பயணம் எப்போதும் தொடரும் என்றார்.