சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்களே... காலங்கள் மாறலாம்; எத்தனையோ தொழில்நுட்பங்கள் - புதிய ஊடகங்கள் வந்திருக்கலாம்;
ஆனால் களத்தில் மக்களைச் சந்தித்து, சாதனைகளைச் சொல்லி, கைகூப்பி வாக்கு சேகரிக்கும் பரப்புரையை எதுவுமே replace செய்ய முடியாது.
நீங்கள்தான் கழகத்தின் வேர்கள்! அறிவாலயத்தின் அஸ்திவாரமே நீங்கள்தான்! என் ஒட்டுமொத்த நம்பிக்கையும் நீங்கள்தான்!
தேர்தல் பணியில் கழக உடன்பிறப்புகளை மிஞ்ச யாரும் இல்லை என மீண்டும் காட்டுவோம்! களம் 2026-லும் வெல்வோம் ஒன்றாக!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.