தமிழக செய்திகள்

ஆற்றில் மூழ்கி மாயமான முதியவர், பிணமாக மீட்பு

திருமருகல் அருகே ஆற்றில் மூழ்கி மாயமான முதியவர், பிணமாக மீட்கப்பட்டார்.

தினத்தந்தி

திட்டச்சேரி:

திருமருகல் அருகே ஆற்றில் மூழ்கி மாயமான முதியவர், பிணமாக மீட்கப்பட்டார்.

ஆற்றில் குளிக்க சென்றார்

திருமருகல் ஒன்றியம் குருவாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 65). விவசாயி. இவர் நண்பர்களுடன் நேற்று முன்தினம் காலை முடிகொண்டான் ஆற்றில் இறங்கி அக்கரையில் உள்ள முனீஸ்வரர் கோவிலுக்கு சென்றுள்ளார். கோவிலில் சாமி தரிசனம் செய்து மீண்டும் மாலையில் திரும்பி ஆற்றை கடந்து வந்துள்ளார். அப்போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதால் சந்திரசேகர் அடித்து செல்லப்பட்டு மாயமாகினார்.

உடல் மீட்பு

இதுகுறித்து தகவல் அறிந்த திருமருகல் தீயணைப்புத்துறையினர் மற்றும் திட்டச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சந்திரசேகரை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். இருள் சூழ்ந்ததால் தேடும் பணியை பாதியில் கைவிட்டு சென்றனர்.

மீண்டும் நேற்று காலை தேடும் பணியில் ஈடுபட்டு சந்திரசேகரின் உடலை மீட்டனர். இதை தொடர்ந்து திட்டச்சேரி போலீசார், உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு