கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

அனுமதியின்றி ஊடக விவாதங்களில் பங்கேற்கக் கூடாது - தவெகவினருக்கு என்.ஆனந்த் அறிவுறுத்தல்

விவாதங்களில் பங்கேற்க தலைமைக் கழகத்தின் முன்அனுமதி பெற வேண்டும் என்று தவெகவினருக்கு என்.ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை,

தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது என்று தவெகவினருக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, கழக மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது.

​பொதுவெளியில் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடிப் பேட்டிகள் மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்குவது உள்ளிட்டவை குறித்து, தலைமைக் கழகத்தின் முன்அனுமதி கண்டிப்பாகப் பெற வேண்டும். முன்அனுமதி பெறாமல், எந்த விதமான மாநில அல்லது தேசிய ஊடகத் தளங்களிலும், விவாதங்களிலும் பங்கேற்பதோ அல்லது நேர்காணல் வழங்குவதோ கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT