தங்கம் விலை குறைவு... இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்த நிலையில் இன்று குறைந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப நாள்தோறும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, தங்கம், வெள்ளி மீது சர்வதேச முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தவாறு இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக நேற்று சென்னையில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,19,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,930-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.

Also Read
பயணங்களின்போது செல்போனில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்டால் அபராதம் - ரெயில்வே நடவடிக்கை
கோப்புப்படம்

இன்றைய தங்கம், வெள்ளி விலை

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,19,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,920-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.295-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Also Read
என் அழகுக்கு அதுதான் காரணம் - நடிகை அஞ்சு குரியன்
கோப்புப்படம்

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை (ஒரு சவரன்) நிலவரம்

26.02.2026 - ரூ.1,19,360

25.02.2026 - ரூ.1,19,440

24.02.2026 - ரூ.1,19,120

23.02.2026 - ரூ.118,880

22.02.2026 - ரூ.117,440

Also Read
குடும்ப பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து நகைகள் பறிப்பு: ஆபாச படம் எடுத்து மிரட்டிய தாய், மகன் கைது
கோப்புப்படம்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com