கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

நாகை-இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை: 6-ந்தேதி முதல் மீண்டும் தொடக்கம்

பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

நாகப்பட்டினம்,

நாகப்பட்டினம் - இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை வருகிற 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் தொடங்குகிறது. இதுகுறித்து கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு சிவகங்கை பயணிகள் கப்பல் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட்டு வந்தது. பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் இந்த கப்பல் போக்குவரத்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு வருகிற 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் தொடங்குகிறது. பயணிகள் கட்டணம், எடுத்துச்செல்லப்படும் சரக்கு அளவு ஆகியவற்றில் எந்தவித மாற்றமும் இல்லை.

Also read:பிராக் சர்வதேச செஸ்: குகேஷ் மீண்டும் தோல்வி

மேலும் புதிய கப்பல் பணிகள் நிறைவடைந்து, அதனை இயக்குவதற்கான அனைத்து சான்றிதழ்களும் பெறப்பட்டுவிட்டன. இந்த மாதம் 2-வது வாரத்திற்குள் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு புதிய கப்பல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.