

பிராக்,
பிராக் சர்வதேச செஸ் தொடர் செக்குடியரசில் நடந்து வருகிறது. இதில் 9 சுற்றுகள் கொண்ட மாஸ்டர்ஸ் பிரிவில் 10 வீரர்கள் பங்கேற்று மோதி வருகிறார்கள். இதன் 5-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ், உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தோரோவை சந்தித்தார்.
கருப்பு நிற காய்களுடன் ஆடிய குகேஷ் 69-வது நகர்த்தலில் தோல்வி அடைந்தார். வலுவான நிலையில் இருந்த அவர் கடைசி கட்டத்தில் இழைத்த தவறால் சறுக்கலை சந்தித்தார். 3 டிரா கண்டுள்ள குகேஷ் சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும்.
நடப்பு சாம்பியனான இந்திய வீரர் அரவிந்த் சிதம்பரம் 40-வது நகர்த்தலில் டேவிட் ஆன்டோனிடம் (ஸ்பெயின்) வீழ்ந்தார். மற்ற ஆட்டங்களில் நெதர்லாந்தின் ஜோர்டான் வான் பாரஸ்ட், ஹான்ஸ் நீமேனையும் (அமெரிக்கா), செக்குடியரசின் டேவிட் நவரா,நோடிர்பெக் யாகுபோவையும் (உஸ்பெகிஸ்தான்), ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூ, வின்சென்ட் கீமரையும் (ஜெர்மனி) தோற்கடித்தனர். 5-
வது சுற்று முடிவில் ஜோர்டான் வான் பாரஸ்ட் 4 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார்.