தமிழக செய்திகள்

நாகர்கோவில் தொகுதி: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நீக்கம்; எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் நடவடிக்கை

நாகர்கோவில் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வை நீக்கம் செய்து, எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இணைந்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கட்சியின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த நாகர்கோவில் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் ஏ.முருகேசன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சி தொண்டர்கள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு